முகப்புகோலிவுட்

விஷ்ணு, ராணா டகுபதி இணைந்து நடிக்கும் பட டைட்டில்

  | June 05, 2018 13:56 IST
Rana Daggubati  Films

துனுக்குகள்

  • இதில் ராணா டகுபதி 3 மொழிகளிலுமே நடிக்கிறார்
  • இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகுகிறது
  • தமிழ் வெர்ஷனுக்கு ‘காடன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது
தனுஷின் ‘தொடரி’ படத்திற்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் புதிய ஹிந்தி படம் ‘ஹாதி மேரா சாத்தி’. இப்படத்தை ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ‘ஈராஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

3 மொழிகளிலுமே ராணா டகுபதி, கல்கி கண்மணி, சோயா ஹுசைன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ஒரு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும் (தமிழ், தெலுங்கு வெர்ஷன்களில்), புல்கிட் சாம்ராட்டும் (ஹிந்தி வெர்ஷன்) நடிக்கிறார்கள்.

தற்போது, தமிழ் வெர்ஷனுக்கு ‘காடன்’ என்றும், தெலுங்கு வெர்ஷனுக்கு ‘ஆரண்யா’ என்றும் டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்