முகப்புகோலிவுட்

`பிக்பாஸ் 2'வில் வெளியாகும் `விஸ்வரூபம் 2' பட சிங்கிள் ட்ராக்

  | June 25, 2018 12:32 IST
Vishwaroopam 2 Songs

துனுக்குகள்

  • ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • இப்படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக ரெடியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக்கை இந்த வார இறுதியில் (ஜூன் 29-ஆம் தேதி) கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ஷோ சீசன் 2-வில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்