முகப்புகோலிவுட்

‘விஸ்வாசம்’ படத்தின் ஆடியோ அப்டேட்

  | September 12, 2018 15:06 IST
Viswasam

துனுக்குகள்

  • இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்
‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்.

அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் 4 பாடல்களும், 1 தீம் மியூசிக்கும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்