விளம்பரம்
முகப்புகோலிவுட்

சமூக வலைத்தளங்களை 'தெறி'க்க விடும் 'தல' அஜித்தின் 'விவேகம்' டீஸர்

  | May 11, 2017 00:20 IST
Movies

துனுக்குகள்

  • மூன்றாவது முறையாக இணைந்துள்ள அஜித் - சிவா கூட்டணி
  • வீரம், வேதாளம் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்
  • விவேக் ஓபராய் வில்லனாக விவேகம் திரைப்படத்தில் நடித்துள்ளார்
வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் திரைப்படம் 'விவேகம்'. பெரிதும் எதிர்பார்க்கப்ட்டுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சற்று நிமிடங்களுக்கு முன் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை பெரும் உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளது.

டீஸர் துவங்கும் போதே இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி அலறுனாலும் நீயா ஒத்துக்குறவரைக்கும் எவனாலும் எங்கையும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது என்று தல அஜித்தின் குரலில் கம்பிரமாக வசனங்கள் தெறிக்க மிலிட்ரி உடையிலும், கருப்பு நிற டிஷர்ட் மற்றும் ஜெர்க்கினில் செம ஸ்டைலாக தல அஜித் கூலர்ஸ் அணியும் காட்சிகள் வேற லெவல்.

அடுத்த நொடியே நெவெர் எவர் கிவ் அப் என்ற ஆங்கில வசனம் அனல் பறக்க பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சியாகட்டும் பனி நிறைந்த காட்டிற்குள் மரத்தின் மீது பன்ச் செய்யும் காட்சிகள் என ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக உள்ளது விவேகம் திரைப்படத்தின் ஒளிப்பதிவு காட்சிகள்.
இந்த ஆண்டின் பிரபலமான வசனங்களாக இந்த இரண்டு வசனங்களும் நிச்சயம் அமையும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. வேதாளம் திரைப்படத்தின் bgm உலக முழுவதும் வரவேற்பை பெற்றதைப்போலவே இப்படத்தின் bgm மும் உலக அளவில் வரவேற்பை பெரும் என்பது டீஸரிலேயே தெரிகிறது இசையமைப்பாளர் அனிருத்துக்கு இப்போதே வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வோம்.

காட்சிகள் அமைந்துள்ள விதம் தல அஜித் மிலிட்ரி உடையில் ராணுவ படைகள் பின்னல் வர ஃபிலைட்கல் சுற்றி இருக்க மிக கம்பிரமாக நடந்து வரும் காட்சிகள் ஆகட்டும், பனி காட்டில் மரத்தின் உச்சியில் புள் அப்ஸ் எடுக்கும் கட்சிகளாகட்டும், தல நிஞ்சாக் சுற்றும் காட்சிளும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை இப்படத்திற்கு உண்டாக்கியுள்ளது.

இறுதியாக தல அஜித் துப்பாக்கியால் சுடும் காட்சியுடன் டீஸர் நிறைவடைந்துலும் சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டிங் படுவேகமாக உள்ளது, அரை மணி நேரத்திற்கு முன்னதாக டீஸர் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தல அஜித் உளவு அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹசன் முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து வசனங்கள் எழுதியுள்ளார்.

பல நாட்களாக பல்கெரிய மற்றும் சேர்பியாவில் நடைப்பெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்