விளம்பரம்
முகப்புகோலிவுட்

இயக்குநர் சிவா பின்பற்றும் வெற்றி செண்டிமெண்ட்

  | March 18, 2017 16:04 IST
Movies

துனுக்குகள்

  • இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விவேகம்
  • செர்பிய நாட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது
  • ஆகஸ்ட் மாதம் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
இயக்குநர் சிவா மற்றும் தல அஜித் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு மீண்டும் விவேகம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, இந்நிலையில் நேற்று நாம் படப்பிடிப்பு நடக்கும் நாடுகள் சம்பந்தமாக பிரத்யோக செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம், இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தேதி, என்று பலரும் ஒவ்வொரு தேதிகளை தெரிவித்துவந்த நிலையில், வீரம், வேதாளம் திரைப்படங்களுக்கு வைத்த அதே செண்டிமெண்டை ,இயக்குநர் சிவா மற்றும் படக்குழுவினர் விவேகம் திரைப்படத்துக்கும் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வீரம் திரைப்படம் ஜனவரி மாதம் 10, 2014 ஆம் ஆண்டும் வெளியானது. அதே போல் வேதாளம் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ல் வெளியானது. இந்த செண்டிமெண்டை அடிப்படையாக கொண்டும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி விவேகம் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிப்பட்டுள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்