முகப்புகோலிவுட்

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப்புடன் கூட்டணி அமைத்த விக்ரம் பிரபு

  | September 14, 2018 15:09 IST
Walter Movie

துனுக்குகள்

  • விக்ரம் பிரபு கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • ‘வால்டர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அன்பரசன் இயக்கவுள்ளார்
  • இதில் முக்கிய வேடங்களில் அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கவுள்ளனர்
ராதாமோகனின் ’60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு கைவசம் தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’ மற்றும் N.V.நிர்மல் குமார் படம் ஆகிய 3 படங்கள் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வால்டர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அன்பரசன் இயக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கவுள்ளனர். இதற்கு ரதன் இசையமைக்கவுள்ளார்.
 
இதனை ‘மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை அக்டோபர் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்