முகப்புகோலிவுட்

"எப்போது குழந்தை பெற வேண்டுமென நானும், நாகசைத்தன்யாவும் முடிவு எடுத்துவிட்டோம்" – சமந்தா

  | April 11, 2018 13:33 IST
Samantha Interview

துனுக்குகள்

  • ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நாயகியாக சமந்தா அறிமுகமானார்
  • கடந்த ஆண்டு நாகசைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா
  • சிவநிர்வனா இயக்கவுள்ள புதிய படத்தில் இவர்கள் ஜோடியாக நடிக்கவுள்ளனர்
தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தெலுங்கில் ‘ஏ மாய சேசவே’) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. இதனைத் தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக சமந்தா நடித்தார். கடந்த ஆண்டு (2017) பிரபல தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்தை அடுத்து இருவரும் தொடர்ந்து செம பிஸியாக படங்களில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் இயக்குநர் சிவநிர்வனா இயக்கவுள்ள புதிய படத்தில் இவர்கள் ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஏற்கெனவே, ‘ஏ மாய சேசவே, மனம், ஆட்டோநகர் சூர்யா’ ஆகிய படங்களில் நாகசைத்தன்யா – சமந்தா டூயட் பாடி ஆடியது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுதானாம். வெகு விரைவில் இதன் ஷூட்டிங் துவங்கப்படுமாம்.

இந்நிலையில், மீடியாவுக்கு சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் “எப்போது குழந்தை பெற வேண்டுமென நானும், எனது கணவர் நாகசைத்தன்யாவும் முடிவு எடுத்து விட்டோம். ஏற்கெனவே, எனக்கு எப்போது குழந்தை வேண்டுமென்ற தேதியையும் நானே குறித்தும் விட்டேன். தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. ஏதோ, அதே தேதியில் தான் நடக்கும் என்பது போல் குறித்தாயிற்று. எனது திருமணத்திற்கு முன்பு, நான் என்னை பற்றி மட்டுமே சதா சிந்திப்பேன். தற்போது, நான் என் குடும்பத்தை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டி உள்ளது. எனக்கு குழந்தை பிறந்த பிறகு, அது தான் என் உலகமாக இருக்கும்” என்று சமந்தா கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்