முகப்புகோலிவுட்

‘கல்யாண சமையல் சாதம்’ ஹீரோயினுக்கு கெட்டிமேளம்

  | November 13, 2017 15:35 IST
Lekha Washington

துனுக்குகள்

  • ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லேகா வாஷிங்க்டன்
  • லேகா பப்லோ சட்டர்ஜி என்பவரை காதலித்து வந்தார்
  • இருவரும் மும்பையில் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள்
தமிழ் சினிமாவில் ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் வந்த ஒரு பாடல் மூலம் அறிமுகமான நடிகை லேகா வாஷிங்க்டன். இதனையடுத்து ‘ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். லேகா வாஷிங்க்டன் மும்பையை சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜி என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் மும்பையில் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள். தற்போது, இவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி மும்பையில் மிக எளிய முறையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேகா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், பப்லோ இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்களது திருமணம் எந்த மதத்தின் சடங்கையும் பின்பற்றாமல் பொதுவான முறையில் நடக்கவுள்ளதாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்