முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ போட்டியாளருக்கு திருமணம்

  | November 10, 2017 13:15 IST
Namitha Bigg Boss

துனுக்குகள்

  • ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் நமீதா
  • ‘பிக் பாஸ்’-யிற்கு பிறகு நமீதாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது
  • ஹவுஸ் மேட்டான ரைசா ஒரு வீடியோவை ஷேரிட்டுள்ளார்
2004-ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்த்தின் ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர் நமீதா. இதனைத் தொடர்ந்து ‘ஏய், இங்லீஷ்காரன், நான் அவன் இல்லை, பில்லா’ போன்ற பல படங்களில் நமீதா நடித்துள்ளார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நமீதாவும் ஒரு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு நடிகை நமீதாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. தற்போது, ‘பிக் பாஸ்’-யில் நமீதாவின் ஹவுஸ் மேட்டான நடிகை ரைசா வில்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேரிட்டுள்ளார்.
 
அதில் நமீதா தனது நீண்ட கால நண்பரான வீர் என்பவரை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்