விளம்பரம்
முகப்புகோலிவுட்

ரியல் ‘பிக் பாஸ்’ யார்? – கமல்ஹாசனின் ட்விட்

  | July 07, 2017 18:04 IST
Kamal Haasan Bigg Boss

துனுக்குகள்

  • உலகெங்கும் ஹிட்டான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’
  • தமிழில் இந்த ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
  • தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவுள்ளார்
சமீபமாக சமூக வலைதளங்களில் பயங்கரமாக டிரெண்டாகி வந்த வார்த்தை ‘பிக் பாஸ்’. உலகெங்கும் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர் என பன்முகம் கொண்ட ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்போட்டியில் ஸ்ரீ, அனுயா, வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், சிநேகன், ஓவியா, ஆர்த்தி கணேஷ், ஆரர், கஞ்சா கருப்பு, ஜூலியனா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசு, நமீதா ஆகிய 15 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஷோ ஸ்டார்ட்டானதிலிருந்து பரபரப்பின் உச்சமாக சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டாக்டரின் அட்வைஸ் படி வெளியேற்றப்பட்டார் மற்றும் முதல் வாரத்தில் அனுயா எலிமினேட்டாகியுள்ளார்.
 
தற்போது, ‘விஜய் டிவி’ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்தை எட்டியுள்ளது. நன்றி மக்களே!” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளது. இதற்கு கமல்ஹாசன் “என் பணியை சுலபமாக்கிய ‘விஜய் டிவி’ டீமிற்கு நன்றி. இந்நிகழ்ச்சியை பார்த்த 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்கள் தான் ரியல் பிக் பாஸஸ். அனைவருக்கும் நன்றி” என்று பதில் ட்விட் தட்டியுள்ளார். தெலுங்கில் இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வருகிற ஜூலை 16-ஆம் தேதி முதல் ‘ஸ்டார் மா’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை முன்னணி தெலுங்கு நடிகர் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கவிருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்