விளம்பரம்
முகப்புகோலிவுட்

மீண்டும் ‘பிக் பாஸ்’ ஷோவில் என்ட்ரியா? – பதறும் கஞ்சா கருப்பு

  | September 02, 2017 13:44 IST
Ganja Karuppu Bigg Boss

துனுக்குகள்

  • ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமான நடிகர் கஞ்சா கருப்பு
  • ‘பிக் பாஸ்’-யில் கஞ்சா கருப்பும் பங்கேற்று பின் வெளியேறினார்
  • இந்நிகழ்ச்சியே ஸ்க்ரிப்ட்படி தான் நடக்குதுன்னு கூறப்படுகிறது
இயக்குநர் பாலாவின் ‘பிதாமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கஞ்சா கருப்பு. இதனைத் தொடர்ந்து ‘ராம், சண்டக்கோழி, சிவகாசி, பருத்திவீரன்’ போன்ற பல முன்னணி நடிகர்கின் படங்களில் காமெடியனாக வலம் வந்து அசத்தியுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ‘தர்மதுரை’ மற்றும் ‘தொண்டன்’. சமீபத்தில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பும் பங்கேற்று பின் வெளியேறினார்.

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோவில் ஏற்கெனவே, வெளியேறிய ஆர்த்தி, ஜூலி ஆகியோரைப் போல் மீண்டும் கஞ்சா கருப்பு என்ட்ரியாவாரா என்ற கேள்வியை கேட்டதற்கு “ஆளைவிடுங்கப்பா சாமி... அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்... நமக்கெல்லாம் அது செட்டாகதுப்பா..” என்று கூறினார்.

மேலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியே ஒரு ஸ்க்ரிப்ட்டுனும், அதன்படி தான் எல்லாருமே நடிக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள்னு சொல்றாங்களே அது உண்மையா? என்று கேட்கையில் “அதெல்லாம் சும்மா சொல்றவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க பாஸ். அந்த வீட்டுக்குள்ள இருக்குறவங்க அவங்கவங்க நடந்துக்குறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறது தான். இது ஸ்க்ரிப்ட்டா இருந்திருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த நொடியே வெளியே தெரிஞ்சுருக்குமே பாஸ்” என்று கஞ்சா கருப்பு கூறினார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்