முகப்புகோலிவுட்

இயக்குநர் பாலாவுடன் இணையும் 'காலா' புகழ் ஈஸ்வரி ராவ்!

  | June 13, 2018 18:15 IST
Varma Movie

துனுக்குகள்

  • தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்தவர் ஈஸ்வரி ராவ்
  • இவர் சமீபத்தில் நடித்த காலா படம் பெரிய வரவேற்பு பெற்றது
  • இதன் பிறகு இவர் நடிக்கும் படத்தின் தகவகள் வெளிவந்திருக்கிறது.

'காலா' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக செல்வி வேடத்தில் ரொம்பவே யதார்த்தமாக நடித்து அசத்திய ஈஸ்வரி ராவ்தான் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டின் 'டாக் ஆஃப் தி டவுன்'. இப்பேற்பட்ட திறமையான நடிகையை இத்தனை நாட்கள் சின்ன சின்ன வேடங்களிலும், சீரியல்களிலும் கோலிவுட் வீணடித்துவிட்டதே என்கிற புகழாரமும் ரசிகர்களிடையே அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பாலாவின் அடுத்த படமான 'வர்மா'வில் ஈஸ்வரி நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மூலம், 'சீயான்' விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் நடிகனாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மிக முக்கியமானதொரு வேடத்தில், நடிகை ஈஸ்வரி ராவ் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிகிறது. 'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' படங்களை இயக்கிய ராஜு முருகன் அவர்கள் இப்படத்திற்கு வசனம் எழுதுவதும் குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்