முகப்புகோலிவுட்

மீண்டும் இணைகிறதா 'கபாலி' கூட்டணி?

  | May 15, 2018 16:08 IST
Pa Ranjith Films

துனுக்குகள்

  • ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.இரஞ்சித்
  • ரஜினி – பா.இரஞ்சித் கூட்டணியில் ரிலீஸான படம் ‘கபாலி’
  • ‘காலா’ திரைப்படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது
தமிழ் சினிமாவில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனையடுத்து ‘மெட்ராஸ், கபாலி’ ஆகிய 2 படங்களை இயக்கினார். தற்போது, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு வில்லன் கதாபாத்திரமாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், பா.இரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதனை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி – பா.இரஞ்சித் கூட்டணியில் ரிலீஸான ‘கபாலி’ படத்தை தயாரித்தது கலைப்புலி.எஸ்.தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்