முகப்புகோலிவுட்

அஜித் படத்தை இயக்கப்போகிறாரா பிரபு தேவா?

  | March 06, 2018 14:56 IST
Prabhu Deva Next Film

துனுக்குகள்

  • அஜித் நடிக்கவுள்ள புதிய படம் ‘விசுவாசம்’
  • அஜித்திடம் வினோத், புஷ்கர் – காயத்ரி ஒன்-லைன் சொல்லியிருக்கிறார்கள்
  • பிரபு தேவா – அஜித் கூட்டணி அமைக்கவுள்ளதாக தண்டோரா போடப்படுகிறது
‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள புதிய படம் ‘விசுவாசம்’. சிவா இயக்கவுள்ள இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கை மார்ச் 23-ஆம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அஜித்தின் 59-வது படத்தை இயக்குவதற்கு ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் வினோத்தும், ‘விக்ரம் வேதா’ பட புகழ் புஷ்கர்-காயத்ரியும், அஜித்திடம் ஒன்-லைன் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.

மேலும், பிரபு தேவா – அஜித் கூட்டணி அமைக்கும் படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்