விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘சோலோ’ படத்தின் ‘சிவா’ கேரக்டர் மேக்கிங் வீடியோ

  | October 03, 2017 11:41 IST
Solo Movie Release Date

துனுக்குகள்

  • இதன் ‘ருத்ரா – சிவா - சேகர்’ கேரக்டர் டீஸர்கள் செம லைக்ஸ் குவித்தது
  • இதில் துல்கர் 4 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார்
  • தமிழ் வெர்ஷனுக்கு ‘யு/ஏ’வும், மலையாள வெர்ஷனுக்கு ‘யு’வும் கிடைத்தது
ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சோலோ’. இப்படத்தை ‘டேவிட்’ புகழ் பீஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் நேஹா ஷர்மா, தன்ஷிகா, தீப்தி, ஆர்த்தி, ஸ்ருதி ஹரிஹரன், சதீஷ், நாசர், பார்த்திபன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். நான்கு கதைகள் கொண்ட இதில் துல்கர் 4 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

மது நீலகண்டன் – செஜல் ஷா – கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு மியூசிக் பேன்ட்களான THAIKKUDAM BRIDGE, MASALA COFFEE, FILTER COFFEE, SEZ ON THE BEAT மற்றும் பிரசாந்த் பிள்ளை, கோவிந்த் மேனன், கெளரவ், ராகினி, அபினவ், சூரஜ் ஆகியோர் இசையமைத்துள்ளனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘REFEX எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து பீஜாய் நம்பியார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘GETAWAY ஃபிலிம்ஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட க்ளிம்ப்ஸ், 11 பாடல்கள், ‘ருத்ரா – சிவா - சேகர்’ கேரக்டர் டீஸர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, ‘சிவா’ கேரக்டர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்