முகப்புகோலிவுட்

ரஜினியின் ‘2.0’வைத் தொடர்ந்து ‘விஜய் 62’

  | January 22, 2018 12:12 IST
Vijay 62

துனுக்குகள்

  • ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் காம்போவில் உருவாகும் 3-வது படம்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘2.0’ படத்திற்கும் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘தளபதி 62’வை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்