முகப்புகோலிவுட்

ஜெயம் ரவி வெளியிட்ட ‘ஏமாலி’ டீஸர்

  | November 03, 2017 17:46 IST
Yemaali Movie Teaser

துனுக்குகள்

  • டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ் நடிக்கின்றனர்
  • ஹீரோயினாக ‘காதல் கண்கட்டுதே’ புகழ் அதுல்யா ரவி நடித்து வருகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றது
‘6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஏமாலி’. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் இயக்குநர் சமுத்திரக்கனி, அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘காதல் கண்கட்டுதே’ புகழ் அதுல்யா ரவி நடித்து வருகிறார்.

சாம்.டி.ராஜ் இசையமைத்து வரும் இதற்கு ரதீஷ் கண்ணா – பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கின்றனர், ஆர்.சுதர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘லதா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.லதா தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்