விளம்பரம்
முகப்புகோலிவுட்

அடுத்த இலக்கை அசால்டாக எட்டியது பாகுபலி 2

  | May 20, 2017 10:49 IST
Movies

துனுக்குகள்

  • இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது
  • முதல் முதலாக 1000 கோடி வசூலித்த திரைப்படம்
  • சுமார் 9000 மேற்பட்ட திரைகளில் வெளியாகியது
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினராலும் பெருதும் எதிர்ப்பார்க்கப்பட்டு சென்ற மாதம் 28 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் சுமார் 9000 திரைகளுக்கு மேல் வெளியாகி இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 1000 கோடி வசூலித்து சாதனைபுரிந்த திரைப்படம் பாகுபலி 2 .

நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் மற்றும் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா என்று மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமும் பல ஆயிரக்கணக்கான துணை நடிகர்களையும் மிகப்பிரம்மாண்டமாக சுமார் 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தற்போது 1500 கோடியை வசூலில் கடந்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
 
baahubali 2

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இத்திரைப்படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் சோபு யெர்லக்கேட்ட தயாரிக்க தமிழகம் மற்றும் இந்தியாவை தவிர பிற நாடுகளில் தமிழகத்தை சார்ந்த நிறுவனமான கே புரொடக்ஷன் வெளியிட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்