முகப்புகோலிவுட்

பிரபல இயக்குநர் படத்தின் மூலம் ஹீரோவாகும் யோகிபாபு

  | September 10, 2018 16:53 IST
Yogi Babu

துனுக்குகள்

  • ‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன்
  • ‘100’ படத்தில் அதர்வா போலீஸாக வலம் வரவுள்ளாராம்
  • இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல காமெடியன் யோகி பாபு நடிக்கவுள்ளார்
ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். இதனையடுத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார். இதிலும் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமாரே நடித்திருந்தார்.

தற்போது, சாம் ஆண்டன் இயக்கிவரும் படம் ‘100’. இந்த படத்தில் அதர்வா போலீஸாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா டூயட் பாடி ஆடியுள்ளார். இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தை இயக்க சாம் ஆண்டன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல காமெடியன் யோகி பாபு நடிக்கவுள்ளாராம். வெகு விரைவில் இந்த படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியிடப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்