முகப்புகோலிவுட்

'தடம்' பட சிங்கிள் டிராக்கை ஷேரிட்ட யுவன் ஷங்கர் ராஜா

  | May 14, 2018 15:05 IST
Thadam Single Track

துனுக்குகள்

  • இதில் அருண் விஜய்-க்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்ஸாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
‘குற்றம் 23’ படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தடம்’. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ஏற்கெனவே, இவர்கள் கூட்டணியில் வெளியான ‘தடையறத் தாக்க’ ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

'தடம்' படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்ஸாம். ஸ்டன்ட் மாஸ்டர் ஃபெஃப்சி விஜயனுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். இதனை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். க்ரைம் த்ரில்லராக தயாராகிவரும் இதன் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
 
அருண்ராஜ் என்பவர் இசையமைக்கும் இதற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘இணையே’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்