முகப்புmollywood

நிஃபா வைரஸை மையப்படுத்தி ஆஷிக் அபு இயக்கும் ‘வைரஸ்’

  | September 04, 2018 13:26 IST
மலையாளத்தில் கடந்த ஆண்டு (2017) இறுதியில் பிரபல இயக்குநர் ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான படம் ‘மாயாநதி’. டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஜோடியாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, ஆஷிக் அபு இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு ‘வைரஸ்’ (Virus) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதை ஆஷிக் அபுவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்தில் ரேவதி, ஆசிஃப் அலி, ரீமா கல்லிங்கல், டோவினோ தாமஸ், பார்வதி, காளிதாஸ் ஜெயராம், ரம்யா நம்பீசன், சௌபின் சாஹிர், திலீஷ் போத்தன், செம்பன் வினோத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாம்.

சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ள இதற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், சைஜு ஸ்ரீதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார், முஹ்சின் பராரி – சுஹாஸ் – ஷர்ஃபு இணைந்து ஸ்க்ரிப்ட் எழுதியுள்ளனர். சமீபத்தில், கேரள மாநிலத்தை உலுக்கிய ‘நிபா வைரஸ்’ (Nipah Virus)-ஐ மையமாக வைத்து இக்கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    விளம்பரம்