முகப்புmollywood

காளிதாஸுக்கு ஜோடியான ஐஸ்வர்யா லெக்ஷ்மி

  | August 31, 2018 15:49 IST
Kalidas

துனுக்குகள்

  • காளிதாஸ் கைவசம் 5 படங்கள் உள்ளது
  • பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்
  • இப்படத்தை ‘ஆடு’ புகழ் இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கவுள்ளார்
தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் காளிதாஸ். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ‘பூமரம்’ என்ற மலையாள படத்தில் காளிதாஸ் நடித்திருந்தார். தற்போது, காளிதாஸ் கைவசம் பாலாஜி தரணீதரனின் ‘ஒரு பக்க கதை’, ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் படம், ஜீத்து ஜோசப் படம், கார்த்திக் நரேனின் ‘நாடக மேடை’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க காளிதாஸ் கமிட்டாகியுள்ளாராம். ‘அர்ஜென்டினா ஃபேன்ஸ் கட்டூர்கடவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த மலையாள படத்தை ‘ஆடு’ புகழ் இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கவுள்ளார். இதில் காளிதாஸுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி டூயட் பாடி ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்