முகப்புmollywood

மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக் பாஸ்’ எப்போது துவங்குகிறது?

  | June 05, 2018 12:45 IST
Big Boss

துனுக்குகள்

  • தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • மலையாளத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது
  • சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 1-க்கான டீசர் வெளியிடப்பட்டது
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீசன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்.

‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் 17-ஆம் தேதி முதல் துவங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 2-வையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மலையாளத்தில் ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 1-க்கான டீசர் வெளியிடப்பட்டது. தற்போது, வருகிற ஜூன் 24-ஆம் தேதி முதல் சீசன் 1 துவங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படுமாம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்