முகப்புmollywood

ஜெயசூர்யா நடித்திருக்கும் `கேப்டன்' பட டிரெய்லர்

  | February 08, 2018 15:50 IST
Captain Movie Trailer

துனுக்குகள்

  • ஜெயசூர்யா நடித்திருக்கும் படம் 'கேப்டன்'
  • பத்திரிகையாளர் ப்ரஜேஷ் சென் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
  • இப்படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவிருக்கிறது
'ஆடு 2' படத்திற்குப் பிறகு ஜெயசூர்யா நடிக்கும் படம் 'கேப்டன்'. பத்திரிக்கையாளர் ப்ரஜேஷ் சென் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கையைத் தழுவி உருவாக்கி இருக்கிறது இப்படம்.

தேசிய கால்பந்தாட்டக் குழுவின் கேப்டனாக இருந்த சத்யன் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார். கன்னூர் மாவட்டத்தில் பிறந்தது தொடங்கி கடைசியில் சென்னையில் தற்கொலை செய்து கொண்டதாக முடிகிறது இவரின் வாழ்க்கை. இதில் இவர் கால்பந்தாட்டத்தில் செய்த சாதனைகளை வைத்து படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேப்பைப் பெற்றுவருகிறது.
 

அனு சித்தாரா, ரெஞ்சி பணிக்கர், சித்திக் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்