விளம்பரம்
முகப்புmollywood

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் திலீப்

  | August 08, 2017 17:06 IST
Celebrities

துனுக்குகள்

  • நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்
  • சிறையில் உள்ள அவருக்கு சிறப்பு வசதி எதுவும் அளிக்கப்படவில்லை
  • நடிகை காவ்யாவிடம் காவல் துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு வல்லுறவுவிற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் உள்ள அவருக்கு சிறப்பு வசதி எதுவும் அளிக்கப்படவில்லை என்று கேரள சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் திலீப்பிற்கு மன அழுத்தத்தால் கடுமையாக பாதித்துள்ளதாகக் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சனை காரணமாக சரியாக உறக்கம் இன்றி அவர் அவதிப்படுவதகவும். தனது இரண்டாவது மனைவியான நடிகை காவ்யாவிடம் காவல் துறை மேலும் விசாரணை நடத்த இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற கவலையிலும் நடிகர் திலீப் உள்ளதாகவும் இதனால் அவர் உடல் நிலை மோசமடைய துவங்கியுள்ளதாகவும் கேரள மாநில சிறைத் துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை அவரது காவல் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்