முகப்புmollywood

நஸ்ரியா தயாரிப்பில் ஃபகத் நடிக்கும் ‘வரதன்’ டீசர்

  | July 14, 2018 10:54 IST
Nazriya Nazim

துனுக்குகள்

  • 2014-ல் ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்
  • அஞ்சலி மேனன் இயக்கியுள்ள ‘கூடே’ இன்று ரிலீஸாகியுள்ளது
  • இப்படத்தில் ஃபகத்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்
நிவின் பாலியின் ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘ராஜா ராணி’, தனுஷின் ‘நய்யாண்டி’, துல்கர் சல்மானின் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் பிரபல நடிகையாக நஸ்ரியா வலம் வந்தார்.

கடைசியாக நஸ்ரியா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. 2014-ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சினிமாவிற்கு ப்ரேக் விட்ட நஸ்ரியா, இயக்குநர் அஞ்சலி மேனனின் ‘கூடே’ எனும் மலையாள படத்தில் நடித்தார். இன்று (ஜூலை 14-ஆம் தேதி) ‘கூடே’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.
 

இந்நிலையில், தனது கணவர் ஃபகத் ஃபாஸில் நடிக்கும் ‘வரதன்’ என்ற மலையாள படத்தை நஸ்ரியா தயாரிக்கிறார். இப்படத்தை அமல் நீரத் இயக்குகிறார். இதில் ஃபகத் ஃபாஸிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி டூயட் பாடி ஆடி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்