முகப்புmollywood

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாகும் ஃபகத் ஃபாசில் படம்

  | December 07, 2018 13:45 IST
Fahadh Faasil

துனுக்குகள்

  • ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஞான் பிரகாஷன்’
  • இதில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
மலையாளத்தில் ‘வரதன்' படத்துக்கு பிறகு ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஞான் பிரகாஷன்'. இந்த படத்தை சத்யன் அந்திகாட் இயக்கியுள்ளார். இதில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நிகிலா விமல் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், முக்கிய வேடத்தில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கே.ராஜகோபால் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஃபுல் மூன் சினிமா' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்