முகப்புmollywood

நஸ்ரியா தயாரிப்பில் ஃபகத் நடித்துள்ள ‘வரதன்’ டிரெய்லர்

  | September 08, 2018 16:09 IST
நிவின் பாலியின் ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘ராஜா ராணி’, தனுஷின் ‘நய்யாண்டி’, துல்கர் சல்மானின் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் பிரபல நடிகையாக நஸ்ரியா வலம் வந்தார்.

2014-ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சினிமாவிற்கு ப்ரேக் விட்ட நஸ்ரியா, இயக்குநர் அஞ்சலி மேனனின் ‘கூடே’ எனும் மலையாள படத்தில் நடித்தார். கடந்த ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸான ‘கூடே’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

இந்நிலையில், தனது கணவர் ஃபகத் ஃபாஸில் நடிக்கும் ‘வரதன்’ என்ற மலையாள படத்தை நஸ்ரியா தயாரித்துள்ளார். இப்படத்தை அமல் நீரத் இயக்கியுள்ளார். இதில் ஃபகத் ஃபாஸிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி டூயட் பாடி ஆடியுள்ளார். தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்