முகப்புmollywood

மோகன் லாலின் ‘டிராமா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  | October 02, 2018 13:49 IST
Mohanlal

துனுக்குகள்

  • மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘டிராமா’
  • இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்கி வருகிறார்
  • இப்படத்தை நவம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மலையாளத்தில் ‘நீரலி’ படத்துக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராமா’. இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்கி வருகிறார். இதில் முக்கிய வேடங்களில் ஆஷா சரத், சுரேஷ் கிருஷ்ணா, முரளி மேனன், சுபி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அழகப்பன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு பிஜிபால் பின்னணி இசையமைத்து வருகிறார், சந்தீப் நந்தகுமார் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘வர்ணசித்ரா குட்லைன் புரொடக்ஷன்ஸ் – லிலிபேட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

 
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற நவம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்