முகப்புmollywood

மலையாள சினிமாவில் தடம் பதிக்கும் தமிழகத்தின் ‘ஜானு’

  | February 08, 2019 12:15 IST
Gowri Kishan Mollywood

துனுக்குகள்

  • தமிழில் வெளியான "96" படத்தில் நடித்திருந்தார்
  • த்ரிஷவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தார்
  • இவருக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றி படம். இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷன் என்பவரும் நடித்திருந்தனர்.

கௌரி கிஷனின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால் இவர் அடுத்து எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் தமிழ் ரசிகர்களிடையே அதிகரித்தது.

தமிழ் திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு மலையாள திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது குறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகார்ப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். “அனுகிரஹித்தன்” என்கிற தலைப்பில் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் ஜாய் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 2019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்