முகப்புmollywood

துவங்கியது காளிதாஸ் ஜெயராமின் புதிய பட ஷூட்டிங்

  | September 10, 2018 15:32 IST
Kalidas Jayaram

துனுக்குகள்

  • காளிதாஸ் கைவசம் 5 படங்கள் உள்ளது
  • பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்
  • இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்
தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் காளிதாஸ். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ‘பூமரம்’ என்ற மலையாள படத்தில் காளிதாஸ் நடித்திருந்தார்.

தற்போது, காளிதாஸ் கைவசம் பாலாஜி தரணீதரனின் ‘ஒரு பக்க கதை’, ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் படம், ஜீத்து ஜோசப் படம், மிதுன் மானுவேல் தாமஸின் ‘அர்ஜென்டினா ஃபேன்ஸ் கட்டூர்கடவு’, ஆஷிக் அபுவின் ‘வைரஸ்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளது.

இதில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ் – விண்டேஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங்கை நேற்று (செப்டம்பர் 9-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்