முகப்புmollywood

மலையாள நடிகை போதை பொருள் விற்றதால் கைது.

  | December 17, 2018 14:13 IST
Aswathy Babu

துனுக்குகள்

  • மலையாள திரையுலகில் வளருகிறதா போதை கலாச்சாரம்?
  • போலீஸின் விசாரனை வலையில் மலையாள நடிகை
  • மலையாள படங்களில் துணை நடிகையாக நடிப்பவர் இவர்
மலையாள படங்களில்  துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு(22). .

அவர் கொச்சியில் உள்ள த்ரிக்காக்காரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் கேரள போலீசார் நேற்று மலையாள நடிகை அஸ்வதியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அஸ்வதியும், அவரின் கார் டிரைவர் பினாய் ஆபிரகாமும் வாடிக்கையாளரிடம் போதைப் பொருளை விற்பனை செய்ய காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.

போலீசார் அஸ்வதி மற்றும் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரில் இருந்து போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் பினாய் கொடுத்துவந்துள்ளது தெறியவந்துள்ளது.

ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்

கடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அஸ்வதியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மல்லுவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்