முகப்புmollywood

மோகன் லாலுக்காக குரல் கொடுத்த மம்மூட்டி

  | December 04, 2018 14:34 IST
Odiyan

துனுக்குகள்

  • இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார்
  • படத்தை டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மலையாளத்தில் ‘டிராமா' படத்திற்கு பிறகு மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒடியன்'. ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட், நரேன், கைலாஷ், சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இதற்கு சாம்.சி.எஸ் பின்னணி இசையமைப்பாளராகவும், ஷாஜி குமார் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெயின் ஸ்டன்ட் இயக்குநராகவும், ஜான் குட்டி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். ஃபேன்டஸி த்ரில்லரான இதனை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளனர்.

‘ஆசிர்வாத் சினிமாஸ்' நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக ‘மெகா ஸ்டார்' மம்மூட்டி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்