முகப்புmollywood

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து மம்மூட்டி

  | January 10, 2018 12:45 IST
The Sound Story

துனுக்குகள்

  • ஆஸ்கர் விருது பெற்ற பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி
  • இவர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’
  • இதன் மலையாள வெர்ஷன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. ஒரே நேரத்தில் தமிழ், ‘THE SOUND STORY’ என்ற பெயரில் மலையாளம் மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. பிரசாத் பிரபாகர் என்பவர் இயக்கி வரும் இப்படத்திலும் ரசூல்பூக்குட்டி சவுண்ட் டிசைனராக வலம் வரவுள்ளாராம்.

இதற்கு ராகுல் ராஜ் இசையமைத்து வருகிறார். ‘PALMSTONE மல்டிமீடியா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பிரசாத் பிரபாகர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். தற்போது, இதன் மலையாள வெர்ஷன் இசை வெளியீட்டு விழாவை வருகிற ஜனவரி 15-ஆம் தேதி திரிசூரில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
இவ்விழாவில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக நடிகர் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி கலந்து கொள்ளவுள்ளாராம். இதை ரசூல்பூக்குட்டியே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். சமீபத்தில், படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல்களை இயக்குநர் ஷங்கரும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்