முகப்புmollywood

மெகா ஸ்டாரின் ‘அப்ரஹாமிண்டே சந்ததிகள்’ பட டிரெய்லர்

  | June 07, 2018 13:46 IST
Mammootty Abrahaminte Santhathikal

துனுக்குகள்

  • இப்படத்தை ஷாஜி படூர் இயக்கி வருகிறார்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்
மலையாளத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்ரஹாமிண்டே சந்ததிகள்’. ஷாஜி படூர் இயக்கி வரும் இதில் ஹீரோயினாக கனிகா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் அன்சன் பால், கலாபவன் ஷாஜோன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு அல்பை ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்