விளம்பரம்
முகப்புmollywood

கேரள மாநில பெண்கள் பாதுகாப்பு போலிஸ் பிரிவின் தூதுவர் ஆனார் நடிகை மஞ்சு வாரியர்

  | March 20, 2017 15:49 IST
Celebrities

துனுக்குகள்

  • சமீபத்தில் மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்
  • கேரள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்ற குரல் எழும்பியுள்ளது
  • பெண்களின் பாதுகாப்பிற்காக பிங்க் ரோந்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் மலையாள நடிகை ஒருவருக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரள மாநிலம் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதி இல்லாத நகரம் என குரல்கள் எழும்பியது. இம்மாநிலத்தில் தான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் கேரள மாநில காவல் துறை பெண்களை பாதுகாக்க ‘பிங்க் ரோந்து’ என்ற பெயரில் பிரிவு ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த பிரிவை அனுகினால் பெண்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மகளிர் காவல் துறையினர் வந்து உதவுவார்கள்.

இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நடிகை மஞ்சு வாரியார் நடித்த இரண்டு நிமிட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத சாலையில் தனியாக பெண்கள் நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
 

அதனைத் தொடர்ந்து பேசும் மஞ்சுவாரியார்…

இது போல் பெண்கள் தனியாக நடந்து வரவேண்டிய சூழல் இருந்தால், தீயவர்களின் தொல்லை ஏற்பட்டால், கல்லூரி மாணவிகள் ஈவ் டீஸிங்குக்கு உட்படுத்தப்பட்டால், அல்லது வேறு விதத்தில் ஏதேனும் உங்களுக்கு பிரச்னை என்று தெரிந்தால் உடனே ‘பிங்க்’ காவல் துறை ரோந்து பிரிவுக்கு (1515) தொலைப்பேசி மூலம் அழையுங்கள். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு மகளிர் காவல்துறை பறந்து வருவார்கள்” என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோ காட்சி கேரள மாநிலத்தில் தற்போது பிரபலமாகி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்