முகப்புmollywood

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்த நிவின் பாலி

  | January 09, 2018 11:25 IST
Kayamkulam Kochunni Movie Cast

துனுக்குகள்

  • ‘காயம்குளம் கொச்சுண்ணி’யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது
  • இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்து வருகிறார்
  • முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ ஒப்பந்தமாகியுள்ளார்
கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் டூயட் பாடி ஆடி வருகிறார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தற்போது, முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நிவின் பாலியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
 
கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்