முகப்புmollywood

நிவின் பாலியுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்

  | February 14, 2018 13:56 IST
Kayamkulam Kochunni

துனுக்குகள்

  • ‘காயம்குளம் கொச்சுண்ணி’யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது
  • இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்து வருகிறார்
  • முக்கிய வேடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ நடிக்கவுள்ளார்
கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடிக்கவுள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இதனை ‘ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படப்பிடிப்பில் மோகன் லாலும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நிவின் பாலியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்