விளம்பரம்
முகப்புmollywood

'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் 'சூப்பர் ஸ்டார்'

  | May 11, 2018 12:31 IST
Bigg Boss 2

துனுக்குகள்

  • தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • மலையாளத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது
  • விரைவில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடப்படுமாம்
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
 
இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீஸன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் முதல் துவங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’  சீஸன் 2-வையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மலையாளத்தில் ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தொகுத்து வழங்கவுள்ளார். வெகு விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடப்படுமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்