முகப்புmollywood

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் `லூசிஃபர்' ஃபர்ஸ்ட் லுக்

  | July 07, 2018 20:29 IST
Lucifer Malayalam Film

துனுக்குகள்

  • 'ஒடியன்' படத்துக்குப் பிறகு மோகன் லால் நடிக்கும் படம் 'லூசிஃபர்'
  • இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் ப்ரித்விராஜ்
  • படத்துக்கு கதை எழுதியிருக்கிறார் முரளி கோபி
'ஒடியன்', 'காயங்குளம் கொச்சுண்ணி' படங்களுக்குப் பிறகு மோகன் லால் நடிக்கும் படம் 'லூசிஃபர்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் ப்ரித்விராஜ். இப்படத்து கதை எழுதியிருக்கிறார் முரளி கோபி.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது. கேரளா, மும்பை மற்றும் சில வெளிநாடுகளில் இப்படம் படமாக்கப்பட இருக்கிறதாம். தற்போது அந்த இடங்களில் படப்பிடிப்புக்கு லொக்கேஷன்களைத் தேடி வருகிறதாம் படக்குழு.
 
தற்போது மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் மோகன் லால். அதே வேளையில் இப்படத்தின் படப்பிடிப்பிலும் ஜுலை 18ம் தேதியிலிருந்து துவங்கவிருக்கிறது என சொல்லப்படுகிறது. மோகன் லால் காட்சிகள் எப்போது துவங்குகிறது? மற்ற யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்