முகப்புmollywood

துவங்கியது மோகன் லாலின் மெகா பட்ஜெட் பட ஷூட்டிங்

  | December 01, 2018 17:20 IST
Mohanlal

துனுக்குகள்

  • குஞ்சலி மரக்காரின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகவிருக்கிறது
  • இந்த படத்தை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவிருக்கிறார்
  • இதில் ஹீரோவாக மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் நடிக்கவுள்ளார்
16-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவன் குஞ்சலி மரக்காரின் வாழ்க்கை வரலாறு மலையாளத் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. ‘மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவிருக்கிறார்.

இதில் ஹீரோவாக மலையாள ‘சூப்பர் ஸ்டார்' மோகன் லால் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மது ஆகியோர் நடிக்கவுள்ளனர். இளம் வயது மோகன் லாலாக அவரின் மகன் பிரணவ் மோகன் லால் நடிக்கவிருக்கிறார்.

இதனை ‘ஆசிர்வாத் சினிமாஸ்' நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்