விளம்பரம்
முகப்புmollywood

‘நீரலி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் லால்

  | July 03, 2018 11:23 IST
Neerali

துனுக்குகள்

  • இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக நதியா நடித்துள்ளார்
  • இதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம
மலையாளத்தில் ‘வில்லன்’ படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் கைவசம் ஸ்ரீகுமார் மேனனின் ‘ஒடியன்’, ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ மற்றும் அஜோய் வர்மாவின் ‘நீரலி’ என 3 படங்கள் உள்ளது. இதில் ‘நீரலி’ (Neerali) படத்தை ‘மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் குருவில்லா தயாரித்துள்ளார்.

மோகன் லாலுக்கு ஜோடியாக நதியா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பார்வதி நாயர், சாய்குமார், திலீஷ் போத்தன், சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். சஜு தாமஸ் திரைக்கதை எழுதியுள்ள இதற்கு ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைத்துள்ளார், சந்தோஷ் துண்டியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், 3 பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, மோகன் லால் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தை வருகிற ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்