முகப்புmollywood

மோகன் லாலின் 'நீரலி' பட ரிலீஸ் ஒத்தி வைப்பு

  | June 05, 2018 16:59 IST
Mohanlal

துனுக்குகள்

  • இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக நதியா நடித்துள்ளார்
  • இதன் டீசர் & டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • முதலில் படத்தை ஜூன் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
மலையாளத்தில் ‘வில்லன்’ படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் கைவசம் ஸ்ரீகுமார் மேனனின் ‘ஒடியன்’, ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ மற்றும் அஜோய் வர்மாவின் ‘நீரலி’ என 3 படங்கள் உள்ளது. இதில் ‘நீரலி’ (Neerali) படத்தை ‘மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் குருவில்லா தயாரித்து வருகிறார்.

மோகன் லாலுக்கு ஜோடியாக நதியா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பார்வதி நாயர், சாய்குமார், திலீஷ் போத்தன், சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். சஜு தாமஸ் திரைக்கதை எழுதியுள்ள இதற்கு ஸ்டீபன் தேவஸ்ஸி இசையமைக்கிறார், சந்தோஷ் துண்டியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. முதலில் படத்தை வருகிற ஜூன் 15-ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்