முகப்புmollywood

‘ஒடியன்’ படத்தில் மோகன்லால் பாடிய ‘என்ஒருவன்’ பாடல்

  | December 06, 2018 11:37 IST
Mohanlal

துனுக்குகள்

  • இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இந்த படத்துக்கு எம்.ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார்
  • ‘என்ஒருவன்’ என்ற பாடலை மோகன்லாலே பாடியுள்ளாராம்
மலையாளத்தில் ‘டிராமா' படத்திற்கு பிறகு மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒடியன்'. ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட், நரேன், கைலாஷ், சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இதற்கு சாம்.சி.எஸ் பின்னணி இசையமைப்பாளராகவும், ஷாஜி குமார் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெயின் ஸ்டன்ட் இயக்குநராகவும், ஜான் குட்டி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். ஃபேன்டஸி த்ரில்லரான இதனை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளனர்.
 

‘ஆசிர்வாத் சினிமாஸ்' நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘என்ஒருவன்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மோகன்லாலே பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்