முகப்புmollywood

மோகன்லாலின் 3டி படமான 'ஒடியன்' டீசர் வெளியானது

  | July 06, 2018 16:22 IST
Odiyan Movie Teaser

துனுக்குகள்

  • இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர்
  • இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
மலையாளத்தில் ‘வில்லன்’ படத்திற்கு பிறகு மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒடியன்’. ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட், நரேன், கைலாஷ், சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.ஜெயச்சந்திரன் இசையமைத்து வரும் இதற்கு சாம்.சி.எஸ் பின்னணி இசையமைப்பாளராகவும், ஷாஜி குமார் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெயின் ஸ்டன்ட் இயக்குநராகவும், ஜான் குட்டி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். ஃபேன்டஸி த்ரில்லரான இதனை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர்.
 
‘ஆசிர்வாத் சினிமாஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, மோகன் லால் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்