விளம்பரம்
முகப்புmollywood

லைக்ஸ் குவித்த வண்ணமுள்ள ஸ்டைலிஷ் ‘வில்லன்’

  | April 27, 2017 16:27 IST
Villain Movie Teaser

துனுக்குகள்

  • ‘1971 பியான்ட் பாடர்ஸ்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • மோகன் லால் – உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் 4-வது படமாம்
  • இப்படத்தில் விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
மலையாளத்தில் ‘1971 பியான்ட் பாடர்ஸ்’ படத்திற்கு பிறகு மோகன்லால், ‘வில்லன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ‘தி மஹாபாரதா, லூசிஃபர்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘வில்லன்’ படத்தை உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன், விஷால், ஹன்சிகா, ஸ்ரீகாந்த், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ புகழ் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு ‘4 மியூசிக்ஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்து வருகின்றனர். ‘ராக்லைன் எண்டர்டெயின்மென்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்டு ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.
 

தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை சில மணி நேரங்களுக்கு முன்பு மோகன் லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேரிட்டார். மோகன் லால் ஸ்டைலிஷாக இரண்டு கெட்டப்பில் வரும் இந்த டீசர் பக்கா மாஸ் ஆக்ஷன் எண்டர்டெயினராக இருப்பதால், மலையாள சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளத்தில் வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்