விளம்பரம்
முகப்புmollywood

வில்லனுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

  | September 12, 2017 10:46 IST
Villain Movie Release Date

துனுக்குகள்

  • மோகன் லால் – உன்னிகிருஷ்ணன் காம்போவில் தயாராகும் 4-வது படம்
  • இப்படத்தில் விஷால், ஹன்ஷிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
  • இதன் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
மலையாளத்தில் லால் ஜோஷ்ஷின் ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்திற்கு பிறகு மோகன் லால் நடிப்பில் தயாராகியுள்ள படம் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’. இதில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லாலுக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் ‘புரட்சி தளபதி’ விஷால் நடித்துள்ளார். மேலும், ஹன்சிகா, ஸ்ரீகாந்த், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ புகழ் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ‘4 மியூசிக்ஸ்’ இசைக்குழு இசையமைத்துள்ளது, சுஷின் ஷ்யாம் பின்னணி இசையமைத்துள்ளார், ஷமீர் முஹமத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ராக்லைன் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் டிரையிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற செப்டெம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்