முகப்புmollywood

நடிகராக அறிமுகமாகிறார் நஸ்ரியாவின் தம்பி

  | April 19, 2018 15:14 IST
Nazriya Nazim

துனுக்குகள்

  • தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா
  • நேரம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நல்ல வரவேற்பைப் பெற்றார்
  • ஃபகத் பாசிலை திருமணம் செய்த பின் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய `நேரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நஸ்ரியா நசீம். முதல் படத்திலேயே பெரிய வரவேற்பு கிடைக்க `ராஜா ராணி', `நையாண்டி', `வாயை மூடி பேசவும்', `திருமணம் எனும் நிக்காஹ்' போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக முன்னேறினார்.

`பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு நடிகர் ஃபகத் பாசிலைத் திருமணம் செய்துவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். அஞ்சலி மேனன் இயக்கம் அடுத்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. தற்போது இவரது வீட்டிலிருந்து சினிமாவுக்கு இன்னொருவர் வருகிறார். அது நஸ்ரியாவின் தம்பி நவீன் நசீம்.

ஃபக்கத்தின் தம்பி ஃபர்ஹான் பாசிலைத் தொடர்ந்து நஸ்ரியாவின் தம்பியும் சினிமாவுக்கு வருவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் குடும்பத்தினர். `கப்பி' படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கும் `அம்பிலி' படத்தில்தான் நடிக்க இருக்கிறார் நவீன். சௌபின் சாஹிர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிராறாம் நவீன்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்