முகப்புmollywood

நஸ்ரியாவின் கம்பேக் படமான 'கூடே' பட ஃபர்ஸ்ட் லுக்

  | June 12, 2018 13:51 IST
Koode

துனுக்குகள்

  • அஞ்சலி மேனன் இயக்கத்தில் தயாராகும் படம் `கூடே'
  • இதில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா நடிக்கிறார்கள்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது
`மஞ்சடிக்குரு', `பெங்களூர் டேய்ஸ்' போன்ற படங்களை இயக்கியவர் அஞ்சலி மேனன். இவரின் `பெங்களூர் டேய்ஸ்' படத்தில்தான் நஸ்ரியா கடைசியாக நடித்தார். அதன் பின் ஃபகத் பாசிலுடன் திருமணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது அஞ்சலி மேனன் இயக்கம் படம் மூலமே மீண்டும் சினிமாவுக்கு திரும்பி வருகிறார்.

ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு `கூடே' எனப் பெயரிப்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இப்படத்தில் ப்ரித்விராஜ் - நஸ்ரியா அண்ணன் தங்கையாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக இருக்கும் என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் அஞ்சலி மேனன். இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்