முகப்புmollywood

நஸ்ரியாவின் கம்பேக் படமான ‘கூடே’ ரிலீஸ் ப்ளான்

  | July 05, 2018 12:43 IST
Koode

துனுக்குகள்

  • ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நஸ்ரியா
  • 2014-ல் ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்
  • ‘கூடே’ படத்தில் ஹீரோவாக ப்ரித்விராஜ் நடித்துள்ளார்
நிவின் பாலியின் ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘ராஜா ராணி’, தனுஷின் ‘நய்யாண்டி’, துல்கர் சல்மானின் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் பிரபல நடிகையாக நஸ்ரியா வலம் வந்தார்.

கடைசியாக நஸ்ரியா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. 2014-ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சினிமாவிற்கு ப்ரேக் விட்ட நஸ்ரியா தற்போது, இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கியுள்ள ‘கூடே’ எனும் மலையாள படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக ப்ரித்விராஜும், இன்னொரு ஹீரோயினாக பார்வதியும் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தை வருகிற ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்